எட்டுக் கால் பூச்சி ஏட்டுக்கல்வி படிக்கவில்லை என்று சொல்லிவிட முடியாது தன் தாயிடம் இருந்து கற்றுக்கொள்கிறது....
தான் கட்டும் வீடு எப்போது வேண்டுமானாலும் காலியாகலாம் எனத் தெரிந்தும் தன் முயற்சியை மட்டும் கைவிடுவதில்லை.ஒரு முறை இருமுறை அல்ல தன் வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு முறை வீழும் போதும் தொடர்ந்து அதே வேகத்தோடு மீண்டும் தன் இருப்பிடத்தை கட்டமைக்கிறது அதற்குத் தெரியும் இதுவும் நிரந்தரமல்ல என்று ஆனால் சோர்ந்து போவதில்லை.
ஆனால் அறிவுள்ள மனிதர்களோ சிறு விசயத்திற்கும் சோர்ந்து போய் மூலையில் முடங்கி விடுவதும்,தன் வாழ்க்கையையே முடக்கிக் கொள்வதும் தற்காலத்தில் அதிகமாகிக் கொண்டு வருகிறது...
எட்டுக்கால் பூச்சியின் போராட்டம்தான் தன் இருப்பை தக்கவைக்கிறது அஃறிணை கூட சோர்ந்து போவதில்லை...
அறிவுள்ள நாம் சோர்ந்து போகலாமா முயற்சிகள் மட்டுமே தன் இருப்பை உறுதிப்படுத்தும்...முயற்சிகள் முடங்கும் போது நீயும் முடமாக்கப்படுவாய்...
எந்த தோல்விகளாலும் உன்னை முடமாக்க முடியாது முயன்று கொண்டிருக்கும் வரையில்...
அஃறிணைகளிடம் இருந்தும் கற்றுக்கொள்ள ஆயிரம் உண்டு....
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்
No comments:
Post a Comment